எது கவிதை ..?

Haiku Kavithaigal

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு…கவிதை!

மேகத்தின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை.

ஜன்னல் வழியே ஒளி வெள்ளமாய் பெருகி வருவது போன்றது கவிதை.

முதல் காதல் கடிதம்

முதல் காதல் கடிதம்…..
புதிதாய் படிக்கிறேன்…
நூறாவது முறையாய்….

நீரோடை

அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

எப்படி சாத்தியம்? 

கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!
பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள் !

இறுதிக் கண்ணீர்த்துளி

இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி….
இலங்கை 

அவலம்

ஜவுளி கடை பொம்மைக்கு
சேலை கட்டும் ஆண்கள்,
ஜகத்தினில் பெண்களுக்கு
சேலை அவிழ்க்க நினைப்பதேன்?

தேசிய கீதம்

அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

வாழும் வகை

மலரோடு தங்கை மாங்கல்ய தாரகை – தாரம்
இழந்தாலென்ன தரம் குறையா தங்கை
கிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம்
துணை வெட்ட வெட்ட உலருது மனிதம்

மயிலே இறகாய்…

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்…
இறகு கொடுத்த உன் நினைவோ
‘குட்டி மேல் குட்டி’!

More haiku Kavithaigal

Comments
Share To
error: Content is protected !!