உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.!

ullathil nalla ullam..

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா… கர்ணா
வருவதை எதிர் கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா… கர்ணா
வருவதை எதிகொள்ளடா

ullathil nalla ullam..


தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா – கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

– கண்ணதாசன்

See Also : கண்ணதாசன் கவிதை தொகுப்பு

Comments
Share To
error: Content is protected !!