முதல் கவிதை …!

முதல் கவிதை

இது,

மாற்றுரு பிரம்மனாய்

மனிதன் மாறும் அற்புத தருணம்…

இயல்புகளின் இடறலில்

இன்மையின் மாற்றங்களில்

இதமான நிகழ்வுகளில்

இதயத்தில் விளையும் முதல் தளிர்…

முதல் கவிதை,

மட்டற்ற மகிழ்ச்சியில்

மடிந்துழலும் சோகங்களில்

மனதில் பளிச்சிடும் மின்னலின் கீற்று…

முதல் கவிதை

இது,

மண்ணோடு சண்டையிடும்

விதை தரும் சிறு தளிர்

சூரியனுடன் நடத்தும் முதல் சந்திப்பு…

முதல் கவிதை

இது,

புரிதலின் அடுத்த அத்தியாயம்…..!

Comments
Share To
error: Content is protected !!