இயற்கையில் சிறு பயணம்…

ஆதவனே…!

கடிகாரம் காணாமலே கண்விழிப்பவனே

காலையில் கரம் விரிப்பவனே

சுட்டெரிக்கும் சூரியன் ஆணவனே!

முழுமதியே .!

துணையில்லாமல் காத்துஇருக்கும் பேரழகியே

உன்னை காணும் அனைவரையும் உன்னையே

துணையாக்க தூண்டும் ஓப்பற்ற அழகியே

உன் பெயர் தான் நிலவோ !

வண்ணமயமானவளே…!

சில்லன்ற வரவை இப்பூமிக்கு வெளிக்காட்ட

நீலவண்ணத் தோட்டத்தில்

ஏழுவண்ண பாதையமைத்து

வருணனின் வரவுக்காய்

வர்ணங்களில் வானவில் அமைக்கிறாயோ !

கடலலையே….!

அலைகளுக்குள் அலைக்கழிக்கப்படுபவளே!

யாருடனோ எதையோ பேசவந்து

சிற்பிகளையும் கிழிஞ்சல்களையும் மட்டும்

பரிசளித்து திரும்புகிறாயோ !

Comments
Share To
error: Content is protected !!